இது போன்ற நிறைய சம்பவங்கள் நடக்கின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் பல காரணங்களை கூறி கிடைக்க வேண்டிய நியாயமான காப்பீட்டுத் தொகையையும் தராமலோ அல்லது இழுத்தடித்தோ தரும் நிலை தான் தொடர்கிறது.

ஒரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு என்ன ஆகும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

நம்ம ஊரில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு காப்பீடு செலுத்தி அவசர காலங்களில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பலருக்கும் இருப்பதில்லை. ஆனால் காப்பீடு செலுத்தும் சிலரையும் இந்த காப்பீட்டு நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறேன். 

நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உள்பட மாநிலம் முழுவதும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீதான புகார் அதிகமாக உள்ளன என்பதை நான் சம காலத்தில் கவனித்து வருகிறேன்.