நள்ளிரவில் பைபாஸ் சாலையில் பிஎஸ்எஸ் தியேட்டரில் படம் முடிந்து பைக்கில் வெளியே வரும் போது ஒரு கருப்பு பொலிரோ மோதுவது போல் சென்றது. அதை பின்தொடர்ந்து சைரன் லைட்டை பறக்க விட்டபடி பின்னால் போலீஸ் பொலிரோ ஜீப்பும் சென்றது.
இந்த காட்சியைப் பார்த்தவுடன் போலீஸ் தரப்பிலும், குற்றவாளிகள் தரப்பிலும் மகேந்திரா நல்ல சோர்ஸ் வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு எனது பைக்கில் அந்த ஜீப்களை பின்தொடர்ந்தேன். பைபாஸ் சாலை மட்டும்தான் நான் செல்ல வேண்டிய பாதை. அதற்கு மாற்றாக வேறு எந்த வழியில் சென்றாலும் நேராக வீட்டிற்குச் சென்றுவிட்டு காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்ற திட்டத்துடன் புறப்பட்டேன். ஆனால் நான் நினைத்த இடத்துக்குள் போலீஸ் அந்த கருப்பு பொலிரோவை பிடித்தால் அதை ஒரு செய்தியாக்கலாம் என நினைத்து விரட்டினேன்.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
சிறிது தூரத்தில் வண்ணாரபேட்டை மேம்பாலத்தில் நான் நினைத்த மாதிரியே போலீசார் அந்த வாகனத்தை சேஸ் செய்து இருந்தனர். அதன் பிறகு நடந்த சம்பவங்களை செய்தியாக்கி இருப்பேன்.
இந்த சம்பவத்திற்கு பிறகு என்ன நடந்தது என அறிந்தால் டிப்பார்ட்மென்டைப் பற்றி கொஞ்சம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். காரணம் அதன் பின் நடந்த சம்பவம் அப்படி...
போலீஸ் வாகனத்தை ஓட்டுவது என்பது தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல்தான். அதற்கு என்ன நேர்ந்தாலும் டிரைவர்தான் பொறுப்பு. அதனாலேயே போலீஸ் வாகனம் என்றால் பொதுமக்கள் உட்பட போலீசாரும் 2 அடி பின்னால் தான் இருப்பார்கள்.
இந்த மாதிரியான ஒரு சூழலில் தான் போலீசார் மிகுந்த சிரத்தையோடு அந்த ஜீப்பை பின்தொடர்ந்தனர். மற்ற ஓட்டுனர்கள் என்றால் ஐயய்யோ.... போலீஸ் வருதே என வாகனத்தை நிறுத்துவார்கள். ஆனால் அந்த ஜீப் அப்படி அல்ல... இதையெல்லாம் தாண்டி போலீசார் உயிரை பணயம் வைத்து, போலீஸ் ஜீப்புக்கு என்னவானாலும் பார்த்துக்கலாம் என்ற துணிச்சலில் சேஸ் செய்து அந்த ஜீப்பை பிடித்து விட்டு பின்னர் அதில் இருந்த 8 பேரை கையேழுத்து வாங்கிவிட்டு வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். காரணம் அந்த ஜீப்பில் ஒரு சமுதாய கட்சியின் கொடி இருந்ததாம்...
அதற்காக கன்று குட்டி திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் காலையில் வந்து காரணத்தை கூறி ஜீப்பை எடுத்துச் செல் எனக் கூறி அனுப்பி உள்ளது உயிரை பணயம் வைத்து பிடித்த சக போலீஸ்காரருக்கு என்ன மரியாதை என கேட்க தோன்றியது. ஆனால் ஜீப்பின் உரிமையாளரோ அதை விற்க கைமாற்றி விட்டதாகவும், நடந்த சம்பவத்திற்கு தான் பொறுப்பில்லை என்றாராம். அப்போ அந்த 8 பேர்...
நான் அடிக்கடி நினைப்பேன்... நம்ம போலீஸ் ஏன் வெளிநாட்டு போலீஸ் போல் சேஸிங் செய்வதில்லை என்று... அது இப்போது புரிகிறது.