காடு தினத்தன்று ஒரு பத்திரிகையாளனாக நெல்லையின் காடுகள் பற்றி கட்டுரை எழுதும் பொறுப்பு என்னைத் தேடி வந்தது. “காடு பல்வேறு வகையான உயிரினங்களின் வீடு” என்ற தலைப்பில் எழுத திட்டமிட்டேன்.

<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->

நேரம் குறைவு, பணி பெரிது. ஆனால், இயற்கையைப் பற்றிய ஆர்வம் என்னை இயக்கியது. தகவல் சேகரிக்க அம்பை வனக் கோட்ட துணை இயக்குநரைச் சந்தித்தேன். அவர் பகிர்ந்தவை காட்டின் உயிரோட்டத்தை உணர்த்தின - பறவைகளின் குரல், மரங்களின் நிழல், உயிரினங்களின் இணக்கம். அலுவலகத்திற்கு வந்து எழுதத் தொடங்கினேன். தினசரி நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தினசரி பத்திரிகைகளின் விதி. 

இதற்கிடையே நம்மை எழுத ஏதாவது ஊக்கப்படுத்தினால் மட்டும்தான் அதைச் செய்ய முடியும். அதைச் செய்தது காட்டின் அழகு. சுவாரஸ்யமாக விவரித்தேன். ஒரு மரம் எப்படி பல்லுயிர்களுக்கு அடைக்கலம் தருகிறது என்பதை எளிமையாகவும், ஆழமாகவும் பதிவு செய்தேன். துணை இயக்குநர் சொன்ன ஒரு வாக்கியம் மனதில் ஒலித்தது - “காடு இல்லையென்றால், உயிர்களுக்கு வீடு இல்லை.” இதை மையமாக வைத்து கட்டுரை ரெடியானது.


காட்டில் வாழும் சிறு பூச்சியிலிருந்து பெரிய விலங்குகள் வரை, அவற்றின் வாழ்க்கை மரங்களோடு பின்னப்பட்டிருப்பதை உணர்ந்தேன். கட்டுரை உருவானபோது, களைப்பு மறைந்து, இயற்கையைப் புரிந்த திருப்தி பிறந்தது. நெல்லை காடுகளின் பசுமையும், உயிர்களின் ஒலியும் வாசகர்களைச் சென்றடையும் வகையில் எழுதி முடித்தேன்.

இந்தப் பயணம் எனக்கு ஒரு பாடத்தை விட்டுச் சென்றது - காடு என்பது வெறும் மரங்களின் கூட்டம் அல்ல; அது உயிர்களின் தாய் வீடு. அதைப் பாதுகாப்பது நம் கடமை என்பதை உணர்ந்த தருணமாக அந்த நாள் அமைந்தது.