42 லட்சத்த ஆட்டைய போட்டுடீங்களாடா.... அப்ரசண்டிகளா...
யூடியூப் வீடியோக்களுக்கு லைக் போட்டால் லாபம் உறுதி எனக் கூறி அரியானா மாநிலம் குர்கான் சிட்டியை சேர்ந்த ஐடி ஊழியரிடம் இருந்து 42 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் ஆன்லைன் வாயிலாக மோசடி செய்துள்ளனர்.
அதில் "எங்களிடம் முதலீடு செய்தால் கொள்ளை இலாபம் பெறலாம்." என மோசடிக்காரர்கள் கூறியதைக் கேட்டு 42 லட்சத்து 31 ஆயிரத்து 600 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார் ஐ.டி. ஊழியார்.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
யூடியூப்பில் சில விடியோக்களுக்கு லைக் போடுங்கள்... பணம் பெறுங்கள் என சமூக வலைதளத்தில் மர்ம நபர்கள் ஆசை வார்த்தை காட்டியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி ஊழியரின் புகாரில் 'என்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு மார்ச் 24ஆம் தேதி யூடியூப் வீடியோக்களை லைக் போடுவதன் மூலமாக பகுதி நேரமாக சம்பாதியுங்கள் என ஒரு லிங்க் வந்தது.
அதை கிளிக் செய்து அவர்களுடன் அந்த வேலை செய்ய திட்டமிட்டேன். அப்போது திவ்யா என்ற பெண் ஒரு டெலிகிராம் குரூப்பில் இருந்து சேர்த்து, எங்களிடம் முதலீடு செய்யுங்கள் உறுதியான லாபம் பெறுங்கள் என அவர் கூறியதைக் கேட்டு எனது வங்கி கணக்கு மற்றும் எனது மனைவியின் வங்கி கணக்கிலிருந்து 42 லட்சத்து 31 ஆயிரத்து 600 ரூபாய் அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பினேன்.
அதன் பிறகு லாபத்துடன் சேர்த்து 69 லட்சம் ரூபாய் நான் சம்பாதித்ததாகவும், அதை பெற மேலும் 11 ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.
அந்த இடத்தில் தான் அவர்கள் என்னை ஏமாற்றுவது எனக்கு புரிந்தது உடனடியாக புகார் செய்தேன்' என்று அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
Source
PTI