2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில், ஆண் - பெண் குழந்தை விகிதாச்சாரம், 1000 - 943 ஆக இருந்தது.

தமிழத்தில் கடலூர், அரியலூர் மாவட்டங்களில் 900 க்கும் கீழ் பெண் குழந்தை விகிதாச்சாரம் உள்ளது.

பிறக்கும் முன் கருக்கொலை ; பிறந்தப் பின் சிசுக் கொலை ; வளர்ந்தப் பின் பாலியல் வன்கொடுமை.

குறிப்பாக பெண்கள் விஷயத்தில் இந்த அவலம் தொடருகிறது.

ஆணவ படுகொலைகள் முதல் சாதிய மோதல்கள் வரை இரட்டை இடுகாடு, இட்டை டம்ளர் என தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் ஏராளம்.

எப்போதுமே, பாதிக்கப்பட்டவர் பார்வையில் தான் மனித உரிமை அணுகப்பட வேண்டும். என்கிறார் தோழமை அமைப்பைச் சேர்ந்த தேவநேயன்.

இன்று, சர்வதேச மனித உரிமைகள் தினம்.

இந்தோனிஷியாவில் செப்டம்பர் மாதம் இறுதியிலும், பாரிஸ் நகரில், அக்டோபர் மாதம் இறுதியிலும் மனித உரிமை காப்பாளர்கள் கூடுகை நடந்தன.

இது போன்ற கூடுகைகளில, பல்வேறு நாடுகளில் நடந்த, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக அரங்கில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.

இன்றைய தினத்தையோட்டி, உலகம் முழுவதிலுமுள்ள, மனித உரிமை காப்பாளர்கள் தீவிர உரையாடல்களை நிகழ்த்துகின்றனர்.

இன்றோடு, உலக அளவில் மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்டு, 70 ஆண்டுகளாகிவிட்டன.

ஐ.நா., சபையின் இரண்டாவது உலக மனித உரிமை மாநாடு வியன்னாவில் நடந்து, 25 ஆண்டுகளாகிவிட்டன.

இவ்வளவு முக்கியத்துவமான இன்றைய தினத்தை உலகமே கொண்டாடுகிறது.

<!-- wp:nextpage --> <!--nextpage--> <!-- /wp:nextpage -->

இந்தியாவில், மனித உரிமை பாதுகாப்புச் சட்டம், 1993ல் இயற்றப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் ஆகிய ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தேசிய மனித உரிமை ஆணையத்தில், 2015- 2016 கால கட்டத்தில், 1 லட்சத்து 17 ஆயிரத்து 808 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், முந்தை ஆண்டு வழக்குகள் சேர்த்து, 1 லட்சத்து 18 ஆயிரத்து 254 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவாகியுள்ள வழக்குகளில், 95 சதவீதம், போலீசார் மீதுள்ளது என்கிறார், மனித உரிமைகள் ஆணைய நீதிபதி, துரை ஜெயச்சந்திரன்.

இந்தியா பன்முகத்தன்மை கொண்டு பல்வேறு ஏற்றத்தாழ்வுகளோடு இருப்பதுபோன்று, தமிழகமும். குறிப்பாக சென்னையும் உள்ளது.

அதுவே, எளிய மனிதர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கும், பணபலம், அதிகார பலம் வாய்ந்தவர்கள் அதனை மூடி மறைப்பதற்கும் வாய்ப்பாக அமைந்து விடுகின்றன.

ஆனால், இதனை வெளிக்கொண்டு வருவதையே பணியாகக் கொண்டுள்ள மாநில மனித உரிமை ஆணையத்திடம்,

உரிமை மீறல் தொடர்பான புகார்கள், அதற்கான தீர்வுகள் குறித்த புள்ளி விவரங்கள் கூட இருப்பதில்லை என, மனித உரிமை காப்பாளர்கள் சாடுகின்றனர்.

ஆணையத்தில், காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால், போதிய பணியாளர்கள் இல்லாமல், வழக்குகளை விரைந்து முடிக்கப்படுவதில்லை என, அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் எவ்விடத்திலும் மனித உரிமை மீறப்பட்டதற்கான முகாந்திரம் இருந்தால், தானாக முன்வந்து விசாரிக்க இவ்வாணையத்திற்கு அதிகாரம் உள்ளது.

ஆனால், மே, 22.,ல் தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து, ஆணையம் இதுவரை ஒரு அறிக்கைக் கூட வெளியிடவில்லை என்கிறார், மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் தலைவர், ஹென்றி ஹிசேன்.

இதற்கு ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "தேசிய மனித உரிமை ஆணையம் இது குறித்து விசாரிக்கிறது. ஒரு ஆணையத்தின் விசாரணையில் இன்னொரு ஆணையம் தலையிடாது" என்றனர்.

கொலையோ, வன்முறையோ மட்டும் மனித உரிமை மீறல் அல்ல, சமூகத்தில் ஒரு சாராருக்கு நிகழ்த்தப்படும் மறுப்பும் உரிமை மீறலே.

உதாரணமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக, கட்டடங்கள், பேருந்துகள் உள்பட அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இல்லாதபட்சத்தில், அவைகளும் மனித உரிமை மீறல்கள்தான் எனப்படுகிறது.

நகர்புறத்தில் வாழும் எளிய மனிதர்கள் மீது ஏவப்படும் உரிமை மீறல்கள் சாதாரணமாக கடந்து செல்லும் ஒன்றாக மாறியுள்ளது.

சென்னையின் குடிசைவாழ் மக்கள், 30-40 கிலோ மீட்டர் தொலைவில் செம்மஞ்சேரி, நாவலூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி குடியமர்த்தப்பட்டு இருப்பதும் உரிமை மீறலே.

உதாரணமாக, செம்மஞ்சேரியில், 6,750 குடும்பங்கள் உள்ளன. 26,000 மக்கள் தொகை கொண்ட இடத்தில் ஒரே ஒரு பகுதி நேர மருத்துவமனை உள்ளது.

24 மணி நேர மருத்துவ உதவி பெறும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இதுபோல், தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் எதிர்கொள்ளும் ஏராளமான உரிமை மீறல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.

<!-- wp:nextpage --> <!--nextpage--> <!-- /wp:nextpage -->

மனித உரிமை குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லாததே அதற்குக் காரணம்.

அதுகுறித்த உரையாடல், இன்னும் அதிகமாக, நம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் நடைபெறுவது அவசியமாகிறது.

இங்கு யாரும் யாருக்காக எதுவும் செய்ய முற்படுவதில்லை... நமக்கான உரிமை, நமது கேள்விக்கான பதில் கேட்டால் தான் கிடைக்கும்...

அது குறித்த புரிதல் வரும்பட்சத்தில் கடல் போன்ற மனித உரிமையை அனைவரும் சென்றடைய முடியும்.


தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் விவரம்.


ஆண்டு - வழக்குகளின் எண்ணிக்கை


2014 - 1043

2015 - 1513

2016 - 1543


விபரம்: தேசிய குற்றவியல் ஆய்வு நிறுவனம்