பிடித்த வேலையில், அதிகார சைக்கோக்களின் டார்ச்சரில் சிக்கி, விழித்துக்கொண்டிருப்பது, உடலுக்கு எந்தத் தீங்கையும் தராத போதையில், உயிரை குடிக்கும் விஷத்தை ருசித்துக் கொண்டிருப்பதற்குச் சமம்.

<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->

அப்படியோரு சிக்கலுக்கு இடையே, ஒருநாள், 1895ம் ஆண்டு, டிசம்பர் 23ம் தேதியிட்ட விவேகானந்தரின் கடித எழுத்துக்கள், கணினி திரையில் ஓடியது தெரிந்தது.

என்ற ‘எழுந்திரு விழுத்திரு’ புத்தகத்தின், இரண்டு வரிகள், செய்தி சேனலில் ஓடும் ‘ஸ்கார்லிங்’ போல், கணினித்திரை தூங்கியபின்னும் ஏதோ ஒரு காரணத்திற்காக திரும்பத்திரும்ப ஓடியது.

ஆனால், அது பின்நாளில்தான் புரிந்தது. அப்போது, குழந்தைத் திருமணம் செய்து கொண்ட உறவினர் பெண், கணவனை இழந்து கைக்குழந்தையுடன் நிற்கதியற்று, அந்நியமாகிப்போனாள். அவளைப்போலவே, கடந்த பத்து ஆண்டுகளில் 6,965 பேர் அந்நியமாகி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு, 1,636 பெண் குழந்தைகளின் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே முடிந்துவிட்டது. என்று, தமிழ்நாடு சமூகநலத்துறை, இந்திய குழந்தைகள் நலச்சங்கம் மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய ஆய்வு கூறுகிறது.

2017ம் ஆண்டு, ‘1098 சைல்டுலைன்’ புகாரின் அடிப்படையில், சென்னையில் ஒன்பது குழந்தை திருமணங்கள் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளின் மருத்துவமனை பிரசவ பதிவின் படி, 2017ல், சென்னையில் 6,200 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. என்பதும், இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூரில் 3,025, மதுரையில் 2,841 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன என்பதும், தெரியவந்துள்ளன. தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தைத் திருமணங்களுக்கும், அரங்கேறிய குழந்தைத் திருமணங்களுக்கும் உள்ள வித்தியாசம் கணக்கிட முடியாத அளவிற்கு உள்ளது.

<!-- wp:nextpage --> <!--nextpage--> <!-- /wp:nextpage -->

பெண் குழந்தைகளுக்கு கல்வியை விட, திருமணம்தான் சிறந்த வாழ்க்கையை கொடுக்க முடியும் என்ற பெற்றோர்களின் எண்ணம் தான் இதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. பெற்றோர்களாலேயே, குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதால், அவை மூடி மறைக்கப்படுகின்றன. அரிதினும் அரிதாக அக்கம்பக்கத்தினரால் ஒரு சில குழந்தைகள் மீட்கப்படுகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் முடிவில், தமிழகத்தில் 2017ல், நடந்த குழந்தைத் திருமணங்களில், 46 சதவீதம் நிச்சியதார்த்தத்திற்குப் பின்னும், 10 சதவீதம் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பும், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

29 சதவீதம் திருமண நாளன்றும், 11 சதவீதம் திருமணம் முடிந்து சில மணிநேரங்களிலும், 4 சதவீதம் திருமணம் முடிந்து சில நாட்களுக்கு பிறகும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. என்பது தெரியவந்துள்ளது. இதில், தமிழக அளவில் 75 சதவீதம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களாகவும், 25 சதவீதம் காதல் திருமணங்களாகவும் உள்ளன. ‘பாலின ஈர்ப்பால் மகள் காதல் வயப்பட்டுவிடுவாளோ?’ என்ற பெற்றோர்களின் பயம்தான், சென்னையில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்க காரணம் என, அந்த ஆய்வின் முடிவு கூறுகிறது. வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக சென்னை வருபவர்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அவர்களை வயது முதிர்ந்த ஆணுக்கு மணம் முடிக்கும் போக்கு இன்றும் நிலவுகிறது. இப்போது புரிந்திருக்கும், 90 களில் பிறந்தவர்கள் ஏன் சிங்கிளாக சுற்றுகிறார்கள் என்பது...