முதல் திருமணநாளில் ஒரு கணவன் தன் மனைவிக்கு ஆச்சரியமளிப்பதைப் போன்ற திரைப்படக்காட்சியை, மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

<!--more-->

அப்போதுதான் அது போன்றதொரு நாளை கண்டுகொள்ளாத அல்லது மறந்து போன கணவனால், ஒரு பெண் தற்கொலை செய்தது நினைவிற்கு வந்து திடுக்கிட்டேன்.

ஓராண்டு திருமண வாழ்க்கையின் துயரத்தை தனியாக ஒரு அறையில் அமர்ந்தபடி பித்து பிடித்தவள் போல் காலையிலிருந்து அன்று இரவு வரை யோசித்து, ஏழு பக்கத்தில் சுருக்கி, யாருக்கும் தெரியாத ஒன்றை எல்லோருக்கும் தெரியப்படுத்த எழுதியிருக்கிறாள்.

பல புறக்கணிப்புகளை சந்தித்த அவள், இந்த புறக்கணிப்பை நினைத்து நினைத்து நான்கு சுவற்றிற்குள் கண்ணீர் வடித்திருக்கிறாள்… தன்னந்தனியாக…

கைபேசி திரையில் தன் முகத்தைப் பார்த்து சிரித்து, அழுது, கண்ணீர் வடித்து தன்னைத்தானே குறும்படம் எடுத்து இருக்கிறாள்.

அந்த நேரங்களில் ஒருமுறைக் கூட அவளது கைபேசி சிணுங்கவில்லை.

யரேனும் ஒருவர் ஒருமுறை பேசிருந்தால் அவளின் மனநிலை மாறியிருக்கக்கூடும். பல புறக்கணிப்புகளை சந்தித்தவள் தானே தேறியிருக்கக்கூடும்.

தான் இறக்கப்போதை இந்த உலகுக்கு வாட்அப்பில் அறிவிக்கும் போது யாரும் ஆன்லைனில் இல்லை.

எல்லோரும் விழிப்பதற்குள் அவள் உறங்கச் சென்றுவிட்டாள் தூக்கு கயிற்றில்…

திருமண நாளை மறந்த கணவன்மார்களுக்கு மறக்க முடியாததாயிற்று அவளது திருமணநாள்..!