தினமும் கணக்குப் பாட வேளையின் போது, 'சேர்ந்திருக்கான் பார்' என்ற குரல் கேட்கும்.

ஆறாம் வகுப்பு கணக்கு வாத்தியாரின் அதிகப்பட்ச திட்டுத<!--more-->லே இந்த வார்த்தைகள் தான்.

அவருக்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை. எங்களுக்காக அவர் எண்ணிலடங்கா கணக்குகள் செய்திருந்தார்.

அவருக்கு அருகில் இருந்த போது கணக்கில் முட்டாள்தனமான சந்தேகங்கள் பல இருந்தன. அதைக் கேட்க வெட்கமே இருந்ததில்லை. புரியவில்லையே என்ற விரக்தியும் இருந்ததில்லை.

<!--more-->

ஆனால், சந்தேகங்கள் கூட்டாக சேர்ந்து என்னை விரக்தியில் வைத்த போது அவரை விட்டு ரொம்ப தூரத்தில் இருந்தேன். அப்போது, அவரைப் போன்ற கணக்கு வாத்தியாரைத் தேடினேன்.

இப்போதும் அவரைக் குறித்த ஒரு சந்தேகம் இம்சித்துக் கொண்டே இருக்கிறது.

எப்படி கணக்கு சொல்லி கொடுத்தார்?

அவர் போட்ட கணக்குகளுக்கு எதோ ஒரு வலிமை இருந்திருக்கிறது. அவர், அவரின் கணக்குகளை என் ஆழ்மனத்தில் புகுத்திவிட்டார்.

அது அவ்வப்போது, என்னுள் படிமமாகிப்போன 'சேர்ந்திருக்கான் பார்' என்ற வார்த்தைகள் என்னையறியாமலேயே வெளிப்பட்டு காட்டி கொடுத்துவிடும்.

என்னுடைய கணக்கு சாருக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.