திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை கிராமம், மலை உச்சியில் தன்னந்தனியாக அமைந்துள்ளது.
இந்த ஊருக்கு செல்ல 18 ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டி வரும்.
மலை ஏறுபவர்களுக்கும், அந்த ஊர்க்காரர்களுக்கும் இந்த மலை உண்மையிலேயே சிறிய மலை தான்.
ஆனால் காங்கிரீட் காடுகளில் சிக்கி, அன்றாட வேலைகளுக்கு இடையே, என்றாவது ஒருநாள் மலைக்காடுகளுக்குச் செல்லும் என் போன்றவர்களுக்கு இந்த மலை பிரம்மிப்பு தான்.
மலை உச்சியில் அதற்கு மேல் செல்ல பேருந்துகள் இல்லை. ஆனால் மலைப்பான மலைப்பாதை இருந்தது.
கால் போன போக்கில், மலை உச்சியில் ஒரு நடை..
சிறுமலை பயணம்
https://youtu.be/N1BC4Qro8Fk







