அரியலூர் காரர்கள் இருவர் நீண்ட நாட்களுக்கு பின், ஆவடியில் ஒரு டீக்கடையில் சந்தித்து கொண்டார்கள்.
"முனியாண்டி எப்படி இருக்கான்?""அவன் , வீட்டுலேயே முடங்கி கிடக்கிறாரான். வண்டி கட்டிட்டு, வெளியூர் போக காசு இல்லையாம்."
“குமார் சர்க்கஸ் கம்பேனிகாரங்க இப்போ எங்கே இருக்காங்க?”
“அவங்க ஆறு மாதத்திற்கு முன்னாடியே சர்க்கஸ் தொழிலை விட்டுட்டாங்க”</blockquote> சிகரெட்டின் பஞ்சு எரியும் வரை, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு, மௌனமாக பிரிந்து சென்றார்கள்...
கூடாரத்திற்கு வரும் ரசிகர்களுக்காக. இன்னும் ‘பறக்கும் பாவை’ எம்.ஜி.ஆர்.,களாக வாழ்கிறார்கள், இந்த ஜோக்கர்கள்.
<!--more-->
அவர்கள் வந்தது; கூடாரம் அமைத்தது; கயிற்றின் மேல் நடந்தது; அந்தரத்தில் பறந்தது; வறுமையில் வெந்தது; இறுதியில் புறக்கணிப்பை எதிர்கொள்ள முடியாமல் சென்றது; எதுவுமே யாருக்கும் தெரியவில்லை.
சில காலம் தங்கி, அந்த ஊர் மண்ணோடு உறவாடி, இறுதியாக பூஜை செய்கிறார்கள்.
இன்னும் ஒரு கூடாரம் அமைப்பதற்காக...
இன்னும் ஒருமுறை கயிற்றின் மீது நடப்பதற்காக...
ஆனால் அவர்கள் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்கள். குழந்தைகள் பல்டி கூட அடித்துவிடக்கூடாது என்பதில்...
புத்தகங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்தால் படிப்பு நன்றாக வரும் என்று எண்ணுவது போல்,
துர்ஷ்ட சக்தி வராமல் இருக்க ஓமம் வளர்ப்பது போல்,
மழை வேண்டி வருண பகவானுக்கு யாகம் நடத்துவது போல்,
பல்டி அடித்தால் படிப்பு ஏறாது என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது.
இனி வரும் காலங்களில் சாகசம் செய்தால் சாக வேண்டியது, தான் என்று, அவர்கள் உறுதியாக நினைத்தார்கள்.