தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில், பெரும் பகுதியை வாடகையாக கொடுக்க மனமில்லாத பலர், 200 சதுர அடிக்கு குறைவான வீடுகளில்தான் வாழ்கின்றனர்.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
வாடகை பணத்திற்காக ஒரு அறையை சுவரெழுப்பி, நான்காக பிரித்து வைத்திருக்கும் மனிதர்களைப் பார்த்தால் சென்னையில் உயிரோடு இருப்பதே பெரிய காரியம் என்ற எண்ணம் சாதாரணவர்களுக்கு வராமல் இருப்பதுதில்லை.
200 சதுர அடி அறைக்கு 2,500 ரூபாய் வாடகை வசூலிக்கும் மாமனிதர்கள் இங்கு உண்டு.

இது நமது சுதந்திர போராட்ட வீரர்களை ஆங்கிலேயர்கள் அடைத்து வைத்த, அந்தமான், காலாபானி சிறையின் ஒரு ‘செல்’ பரப்பளவை விட 68 சதுர அடிதான் அதிகம்.
அத்தனைக்கும் ஆசைப்படும் வீட்டு உரிமையாளர்கள் மின்சாரக் கட்டணத்திலும் ஒரு தொகையை லம்பாக அடித்துவிடுகின்றனர்.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
வீடுகளுக்கு, அரசு மானியம் போக, அதிகப்பட்சமாக, ஒரு யூனிட் மின்சாரம் மூன்று ரூபாய் ஆகும். ஆனால் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு எட்டு ரூபாய் வசூலித்து வாத்துகளை சோதனைக்கடலில் ஆழ்த்துகின்றனர்.
இதுதவிர சில இடங்களில் ஆண்டுதோறும் 500 ரூபாய் வாடகை உயர்த்தியும், இன்னும் ஒரு சில இடங்களில் முறைவாசல் என்ற பெயரில் முற்றத்தில் தண்ணீர் தெளிக்கவும், கோலம் போடவும் 500 ரூபாய் என, மாதாமாதம் வீட்டு உரிமையாளர்களால் வசூலிக்கப்படுகிறது.
மாதாமாதம், வாத்து இடும் பொன்முட்டையை ஒரே மாதத்தில் எடுத்துவிடலாம் என, நினைக்கும் சில வீட்டு உரிமையாளர்கள், இதுபோன்ற பொருளாதார சுரண்டலையும், மனித உரிமை மீறலையும் கூசாமல் செய்து விடுகின்றனர்.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம் எதிர்க்குரல் பலமாக இல்லை எனபதே உண்மை. அதற்கு நம் சமூகத்தின் ஜீன் குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம் என, உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரே மதத்தில், ஒரே சாதியில், அதிலும் ஒரே கிளை சாதியில் உள்ள ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைக்கு எதிர்க்குரல் கொடுக்க போதுமான பலம் இருப்பதில்லை என, அறிவியல் சொல்கிறது.
நம் சமூகம் நலமடைய, புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகளை நாம் ஏற்க நமக்கு பலம் வேண்டும்... இல்லையென்றால் ஆங்கிலேயர்கள் போல வீட்டு உரிமையாளர்கள், ஹிந்திக்காரர்கள், கன்னடர்கள் என பலர் அடிமைப்படுத்த நேரிடலாம்.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->