ஒரு மனிதனை விலைக்கு வாங்கிய முதலாளி, அவனுக்கு ஊதியம் தராமல் அடிமைப்படுத்துவது அந்த காலம்...

<!--more-->

மனிதர்கள் சிலரை, குறைந்த ஊதியத்தில் வேலைக்கு எடுத்து, அதிகமாக கடனை கொடுத்து, அவன் உழைப்பை சுரண்டுவது இந்த காலம்...

வரதட்சனை தடுப்பு சட்டம் 1961 ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தும், வரதட்சனையை எப்படி ஒழிக்க முடியவில்லையோ, அது போல் கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டு 42 ஆண்டுகள் ஆகியும் கொத்தடிமைகளை காப்பாற்ற முடியவில்லை.

வோல்க் பிரி என்ற அறக்கட்டளை 2016ம் ஆண்டில், இந்தியாவில் தான் அதிகமான கொத்தடிமைகள் உள்ளனர் என அறிக்கை வெளியிட்டது.

அந்த அடிமைகள் யார் என்று எனக்குத் தெரியும். அவர்கள் எங்கிருக்கிறார்கள் எனபதும் தெரியும்...

என்றாவது ஒரு நாள் கடின உழைப்பு தன்னை முன்னேற்றும் என்ற நம்பிக்கையில், உழைப்பு சுரண்டப்படுவது கூட தெரியாமல் காத்திருப்பவனிடம் என்ன சொல்லி புரிய வைப்பேன். கொத்தடிமை என்பவன் நீதான் என்பதை ...

ஆனால் ஒன்று செய்ய முடியும்... கேள்வி கேட்க முடியும். உலகறிய செய்ய முடியும்.

[caption width="1280"]மீட்கப்பட்ட சட்டீஸ்கர் மாநிலத்தவர்கள்.[/caption]