சென்னைப் புத்தகக்காட்சியில் முனைவர் ஞானசம்பந்தன் பேசியதாவது:
இன்று 24 மணிநேரங்களும் பொதுமக்கள் தொலைக்காட்சியே, கதி என்றிருக்கிறார்கள். தொலைக்காட்சி பெட்டியை எடுக்கும்போது தான் திருடன் வந்திருப்பதே அவர்களுக்கு தெரிய வருகிறது.

<!--more-->

படிப்பதன் அவசியம் என்ன? என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் ஒரு சிலர் படிப்பதை மனப்பாடம் செய்வதா? வேண்டாமா? என்றால் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் மனப்பாட சக்தி இருத்தால்தான் தமிழர்கள் உலகை வென்றார்கள். ஒரே நேரத்தில் பத்து வேலைகள் செய்யக்கூடிய தசவதானிகள், 100 வேலைகளை செய்யக்கூடிய சதவதானிகள் தமிழகத்தில் இருந்தனர்.

விவேகானந்தர் ஒரு முறை கன்னியாகுமரிக்கு சென்ற போது, தனது தாய்க்கு என்னவானதோ? என்ற கவலையில் இருந்தார். அப்போது அங்கு ஒருவர் பிணத்தில் இருந்து எடுத்த கொள்ளிக் கட்டையை எடுத்து அவருக்கு, ‘நீர் கடல் கடந்து செல்வாய், அதுவரை உனது தாய் நலமுடன் இருப்பார்’ என, ஜோசியம் கூறினார்.

அதற்கு விவேகானந்தர் புன்னகைத்தார். பின்னாளில் அது உண்மையாகும் போது, அவர் ‘நான் ஞானிகள் நிறைந்த தேசத்தில் இருந்து வருகிறேன்’ என்றார்.

இதைத்தான் எந்தப் பூவில் எவ்வளவு தேன் இருக்கும் என்பார்கள். ஞானிகள் எங்கிருக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது. அவர்களை நாம் தான் கண்டு கொள்ள வேண்டும்.

துாக்கனாங்குருவி போல சிறந்த பொறியாளர் யாரும் இருக்க முடியாது. ஆண் குருவிதான் கூடு கட்டும். பெண் குருவி பார்வையிடும். இரண்டு படுக்கை வசதி, அவசர நுழைவுவாயில் கொண்டு, அந்த குருவி கட்டும் கூடு, எவ்வளவு காற்று அடித்தாலும், கீழே விழாது. ஆண் பனை மரத்தில் தான், குருவி கூடு இருக்கும். பெண் பனை மரத்தில் அடிக்கடி ஆட்கள் ஏறுவார்கள் என்ற தெளிவு அந்த குருவிக்கு இருக்கிறது.

அதுபோல நமக்கு ஞானிகளை கண்டுகொள்ள தெளிவு வேண்டும்.</blockquote>