ஒருமுறை புதுமைப்பித்தன், தன்னுடைய மனைவிக்கு கடிதம் இவ்வாறு எழுதுகிறார். ‘கமலா இனிமேல் வெற்றிலைப்பாக்கு போட பழகிக்கொள். ஏனென்றால் ஒரு வேளை உணவு இல்லையென்றாலும்,
வெற்றிலைப்பாக்கு போட்டால் உணவு சாப்பிட்ட மாதிரி இருக்கும்’ என, எழுதியிருக்கிறார் என்றால் இந்த சமூகம் எழுத்தாளரை எவ்வளவு ஏழ்மையில் வைத்திருக்கிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். படைப்பாளிகளை ஏழைகளாக வைத்திருக்கும் சமூகம் ஏழ்மையாகவே இருக்கும்.இப்போதேல்லாம் நமக்கு குழுவாக செயல்படும் மனோபாவம் மேலோங்கியுள்ளது. இது விலங்குகளுக்கு உரிய குணம். சின்ன விஷயத்திற்குக் கூட சிறிய குழுக்களாக கூடி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு கருத்தியலோடு சிந்தித்து கூட்டமாக இயங்கும் மனித இயல்பு நம்மிடையே இல்லை.
குன்றக்குடி அடிகளார் ஏற்பாடு செய்த விழாவிற்கு பெரியாரும், அவரது சகாக்களும் வந்திருந்தனர். விருந்தை முடித்து விட்டு புறப்படும் போது குன்றக்குடி அடிகளார், பெரியாரின் நெற்றியில் திருநீர் வைத்துவிட்டார்.
பெரியார் அமைதியாக, அங்கிருந்து புறப்பட்டு, காரில் வந்து அமர்ந்தார். அப்போது, அவரது சகாக்கள் ‘நமது கொள்கைக்கு எதிராக நெற்றியில் திருநீர் வைத்துவிட்டாரே. நீங்கள் அமைதியுடன் வந்து விட்டீர்கள்’ என, கேட்டனர்.
‘இவ்வளவு ரோஷம் உள்ளவானாயிருந்தால், சாப்பாடு போடும் போதே நீ எழுந்து வந்திருக்க வேண்டியதுதானே’ என, பெரியார் கூறியுள்ளார். என்றால் அவர் உறவுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நெல்சனன் மண்டேலோ கூறுகையில், ‘உன்னை விட நான் வித்தியாசமானவன் இல்லை. உன்னைப் போலவே நானும் வித்தியாசமானவன். மற்றப்படி நாம் அனைவரும் சமமானவர்கள்’ என, கூறுகிறார். மனிதர்கள் அகந்தையை விட்டொழிக்க வேண்டும்.
வேடிக்கையாக செல்வார்கள், தீப்பெட்டியையும், தீக்குச்சியையும் உரசினால் தீக்குச்சி எரிந்து சாம்பலாகிவிடும். ஏனென்றால் தீக்குச்சிக்கு மண்டக்கனம் அதிகம் என்பர். அகந்தை உள்ள மனிதன் அழிந்துவிடுவான்.
பணம் சேகரிக்க ஓடுகிறார்கள், கட்டடம், சொத்து சேகரிக்க மனிதர்கள் ஒடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எவன் ஒருவன் நிஜமான மனிதனை சம்பாதிக்கிறானோ, அவனுக்குத்தான் உறவுகள் மேம்படும்.</blockquote> Shruti TV...
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=o7VVayMF4Aw