சிறுவயதில் பித்துபிடித்தவள் போல புத்தகங்களைத் தேடி அலைந்தேன். வேதியியல் தேர்வுக்கு தயாரான போது, பொன்னியின் செல்வன் படித்தேன். அதில் ஆதித்தச்சோழன் கொல்லப்பட்டான் என்று வரும் போது, தேம்பித் தேம்பி அழுதேன்.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more --></div> <!-- /wp:column --></div> <!-- /wp:columns -->
நான் அழுவதை பார்த்த அப்பா, வேதியியல் தேர்வு எளிதாக இருக்கும் என்று ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வு எப்போதுமே மறக்க முடியாதது. புத்தகங்கள் ஒருவித பரவசத்தை ஏற்படுத்துக்கிறது. இளமையில் ஆரம்பிக்காத எந்த பழக்கமும் தொடராது.
நமக்கு என்ன வேண்டும் என்று அறிந்தவள் அம்மா, அதுபோல் நமக்கு என்ன தேவை என, நுால்களுக்கு தெரியும்.
அதை தொடர்ந்து வாசிப்பதன் மூலம்தான் பெற முடியும், ஆனால் இன்று எல்லாமே கையடக்கத்தில் இருக்கிறது, என சாதனங்களில் சிக்குண்டவர்களாக இருக்கின்றனர் இளைய தலைமுறையினர்.
3 மேடைக்குக் செல்ல ஒரு நிமிடம் முன்பு வரை பகத்சிங் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். எந்த புரட்சி ஆயுதங்களை விட புத்தகங்கள் ஆபத்தானது என்றார் லெனின். புத்தகங்களை தேடித்தேடிப் படித்தவர்கள்தான் படைப்பாளியாக ஆகியிருக்கிறார்கள்.
ஆனால் இன்றைக்கு மாணவர்களுக்கு மொழித்திறன் இல்லை. அதற்கு காரணம் எந்த தொழிலுமே கிடைக்காததால் ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள்தான் காரணம். இவர்களை நம்பினால் பிள்ளைகளுக்கு மொழித்திறன் எப்படி வளரும்?
- சென்னைப் புத்தகக்காட்சில் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசினார்.
Shruti TV