புத்தகக் காட்சியில் கவிஞர் கவிதாசன் பேசியதாவது:
உங்களால் ஒரு வரி படிக்க முடிந்தால் ஆத்திச்சூடி படியுங்கள், இரண்டு வரிகள் படிக்க முடிந்தால் திருக்குறளை படியுங்கள், மூன்று வரிகள் படிக்க முடிந்தால்
முன்னேற்ற, சிந்தனை வரிகளை படியுங்கள், நான்கு வரிகள் படிக்க முடிந்தால் நாலடியாரை படியுங்கள்.

எதையும் படிக்க முடியவில்லையென்றால், செத்து மடியுங்கள். இதை நான் சொல்லவில்லை ‘செய் அல்லது செத்து மடி’ என, மகாத்மா கூறியுள்ளார். இப்போதெல்லாம், சொன்னது யார் என, சொல்லவில்லையென்றால் பிரச்னை வந்துவிடுகிறது.

பத்து பறவைகளைப் பற்றி படித்தால், பறவைகள் போல பறக்க முடியாது. பத்து நதிகளைப் படித்தால் நதிகள் போல் ஓட முடியாது. ஆனால் பத்து புத்தகங்களைப் படித்தால், உங்களை 11வது புத்தகமாக மற்றவர்கள் படிப்பார்கள்.

மேடையில், ஒருமுறை பேச்சாளர், ‘குடும்பத்தில் புரிதல் இருந்தால் பிரிதல் இருக்காது’ என்றார். ஆனால் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்பதை அவர் சொல்லவில்லை. அதையே நான், ஒருவரைஒருவர் புரிந்து கொள்ள முடியாது என்பதை, புரிந்து கொண்டு வாழ்ந்தால் பிரச்னை இருக்காது என்றேன்.

‘நான் பீடி சுற்றுகிறேன்,

அம்மா முறுக்கு சுற்றுகிறார்,

அப்பா, டாஸ்மாக்கை சுற்றுவதால்...’

என, ஒரு மாணவி எழுதுகிறாள் என்றால் எந்தளவுக்கு இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை வேண்டும்.

முடிந்தவரை முயற்சி செய்வது முயற்சியல்ல, முடியும் வரை முயற்சி செய்வது தான் முயற்சி. காரணங்கள் சொல்பவர்கள் காரியங்களை செய்யமாட்டார். காரியங்களை செய்பவர்கள், காரணங்களை சொல்லமாட்டார்கள்.</blockquote>