உலக வணிக மொழி ஆங்கிலம், உலக வேத மொழி சமஸ்கிருதம், உலக வடிவ மொழி சீனம், உலகத் தாய் மொழி தமிழ் என்பதில் பெருமை கொள்வோம். தாய்த்தமிழ் பேச்சை கேட்க, மண்ணில் அமர்ந்திருக்கிறீர்களே.. உண்மையிலே நீங்கள் மண்ணின் மைந்தர்கள்.

வள்ளுவன் மட்டும் உயிர்த்தெழுந்து வந்தால் கண்ணீர் விட்டிருப்பான், அறிவைத் தேடி மண்ணில் அமர்ந்திருக்கும், தமிழ்ச்சமூகத்தைப் பார்த்து! உடம்பில் இருக்கும் மச்சத்தைப்போல், தமிழரின் மச்சம்தான் வள்ளுவன்.

ஒரு முறை டெல்லியில் ஜனாதிபதி அப்துல்கலாமை 13 நிமிடம் சந்தித்தேன். எனக்கு பயமாகிவிட்டது, ஒரு 50 திருக்குறள் சொல்லியிருப்பார். ஆனால் நமக்கு நேரம் இல்லை என்கிறோம். ஜனதிபதி மாளிகைக்கு மூன்று பெட்டிகளோடு சென்றவர், இரண்டு பெட்டியோடு திருப்பினார்.

அவரது பதியேற்பு விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள், தங்கி இருந்த செலவிற்காக, 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செக்கை எடுத்து நீட்டினார். இந்த உலகமே அவரைப் போல ஒரு ஜனாதிபதியை பார்த்திராது.

கரிசல் காட்டில் இருந்து ஒரு பையன் எழுதுகிறான்.

‘அரசியல்வாதி அழுக்கானவர்தான்

அவர் வருகையால் தெரு சுத்தமானது’

அவனை நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

‘வாய்க்கரிசி சுடுகாட்டு சித்தெறும்புக்கு உணவானது’

எங்கிருந்து எழுதுகிறான் என்றே தெரிய வில்லை. இப்படிப்பட்டவர்களை அடையாளப்படுத்துவதற்குத்தான் புத்தகக்கண்காட்சி.

- 41வது புத்தகக் காட்சியில் பேச்சாளர் மணிகண்டன் பேசினார்.