<!--more-->
6 மணி ஆக இன்னும் ஒரு மணி நேரம் தான் உள்ளது. இதே 6 மணிக்குத்தான் நேற்று முன்தினம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவரின் உறவினர்கள் அழுதார்கள். நேற்று 6 மணிக்கும் அழுகுரல் கேட்டது. ஆனால் இந்த முறை அழுதது இன்னொருவர். இதே இடத்தில் இருந்தவர்கள் தினமும் அழுகிறார்கள்.
இறப்பவர்களும், அழுகிறவர்களும் மாறிக்கொண்டே இருப்பதை தவிர்த்து, வேறு எந்த மாற்றமும் இங்கு நிகழவில்லை.
யாரும் இந்த மருத்துவமனைக்கு வர விரும்புவதில்லை. எல்லா இடங்களுக்கு சென்று நம்பிக்கையற்று இறுதியாக இங்குதான் வருகிறார்கள்.
இரயில் நிலையங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும் வழியனுப்ப வருபவர்கள் போல கூட்டமாக வருகிறார்கள். ஆனால் ஒவ்வாரு முறையும் ஒருவர் மட்டும் செல்கிறார், தன்னந்தனியாக…
நேற்று வந்த அதே இடத்தில் இன்று என்னுடைய முறைக்காக காத்திருக்கிறேன். என்னுடன் வேறு சிலரும் காத்திருக்கிறார்கள்….