டெங்கு காய்ச்சலை விடவும் ஒரு கொடிய நோய் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மைதானா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் மாவட்ட சுகாதாரத்துறை இதைப் பற்றி எந்த கருத்தும் கூறவில்லை.
<!--more-->
நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கடையம், கீழக்கடையம், விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது. பலர் இதில் இறந்துள்ளனர். ஆனால் இது மர்ம காய்ச்சல் என்றும், டெங்குவை விட கொடிய நோய் என்றும் ஒரு செய்தி மக்களிடையே திரும்பத்திரும்ப பேசப்படுகிறது. இது ஒரு வித குழப்ப நிலையையே உண்டாக்குகிறது.
ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து கடந்த 2 மாதங்களாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருவதும், அவர்கள் ஓரிரு நாட்களில் இறப்பதும் வாடிக்கையாகிவிட்டது. வயது வித்தியாசமின்றி இந்த மர்ம காய்ச்சல் அனைவரையும் தாக்குகிறது.
உடனடி காலநிலை மாறுபாட்டினால் இந்த பெயர் தெரியாத காய்ச்சல் மக்களை தாக்குகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக கையாளுவது அப்பட்டமாக தெரிகிறது.
சுகாதார நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் எத்தனை மருத்துவ முகாம் நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த தகவலும் இல்லை.