ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விதவிதமான போராட்டம் நடக்கும். டெங்கு காய்ச்சலும் தனது பங்குக்கு சிலரை வாரிக்கொண்டு போகும். இதுவெல்லாம் நடப்பது திருநெல்வேலியில் தான்.

<!--more-->

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில்.. இந்த மாதம் (மே) 14-ம் தேதி புளியங்குடியை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண் டெங்கு காய்ச்சலால் பலியானார். கருவில் உருவான சிசு இந்த உலகத்தை பார்க்காமலே விடைபெற்று கொண்டது.

18-ந் தேதி விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த 7 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் இறந்து போனாள்.

25-ம் தேதி சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை டெங்கு காய்ச்சல் வாரிக்கொண்டு போனது.

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு ஒதுக்கிவிட்டார்கள். நடவடிக்கை எடுத்தாயிற்று...

ஒவ்வொரு கோடைகாலத்திலும் இது நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது... இன்னும் கோடைக்காலம் முடியவில்லை...

டெங்கு காய்ச்சல் உயிர்க்கொல்லி நோய் அல்ல. மாவட்ட நிர்வாகம் நினைத்தால் ஏடிஸ் கொசுவை அழித்து டெங்கு காய்ச்சலை அடியோடு ஒழிக்கலாம். ஆனால் நினைக்காது.
மாவட்ட நிர்வாகம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க குறைந்தபட்சம் 50 பேராவது இறந்திருக்க வேண்டும்.
குடிநீருக்கே போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. உயிரைக் காப்பாற்ற புரட்சிதான் செய்ய வேண்டும் இந்த ஜனநாயக அரசில்…