ஒரு குழந்தையை கெட்டவனாக வளர்க்கும் கெட்ட அப்பா; நல்லவனாக வளர்க்கும் நல்ல அப்பா; இவர்களால் சமுகத்துக்கு ஏற்படும் விளைவு தான். இந்த படம் நமக்கு சொல்ல வரும் செய்தி.

<!--more-->

தனது குழந்தையை தினமும் தாமதமாக பள்ளியில் விடும் ஒரு தந்தையாக வரும் இளைய தளபதி ஜோசப். முக்கால்வாசி தந்தைகளின் பிரதிபிம்பமாகவே மாறி இருக்கிறார். பின்னர் தான் தெரிகிறது அவர் ரவுடிகளுக்கே பாடம் நடத்துற, அரசியல்வாதி கண்களில் விரலை விட்டு ஆட்டுகிற, ரேப் ‘கேஸ்’சை 10 மணி நேரத்தில் கண்டுபிடித்து குற்றவாளியைப் போட்டுத்தள்ளுற (கொலை) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி விஜய் குமார் என்று. இது முக்கால்வாசி போலீஸ் அதிகாரிகளின் பிரதிபிம்பம் அல்ல என்பது வருத்தம்தான்.

பெரும்பாலான சமீபத்திய தமிழ் சினிமா மாதிரியே அரசியல்வாதியின் மகன் ஒரு அப்பாவி பெண்ணை கற்பழித்து விடுகிறான். அரசியல்வாதியின் மகன் திருந்தினாலும் இயக்குனர்கள் திருந்த விட மாட்டார்கள் போலும். பின்னர் விஜய் குமார் கண்டுபிடித்து அவனை கொன்று பாலத்திற்கு கீழ் தொங்க விடுகிறார். பதிலுக்கு அரசியல்வாதியும் விஜய் குமார் குடும்பத்தை கதம் கதம் செய்து விடுகிறார். அதிலிருந்து விஜய் குமார் தப்பித்து ஜோசப்பாக கேரளாவில் தனது குழந்தையுடன் வாழ்கிறார். அப்போது தான் எமி ஜக்சன் கேரளத்து ஆசிரியையாக அறிமுகமாகிறார். டீச்சருக்கு ஜோசப் மேல ஒரு இது இருந்தது. (கதை கேரளாவில் தொடங்குவதால் ‘பிளாஷ்பேக்’ கேட்க ஒரு ஆள் அவ்வளவுதான்)

இதை அறிந்த வில்லன் குழந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்க; ஜோசப், விஜய குமாராக மாறி சென்னை ரவுடிகளை இரவில் மட்டும் வந்து போட்டு தள்ளிட்டு கேரளாவிற்கு போய் விடுவார். கடைசியில் முக்கிய வில்லனை கொன்று தலைகீழாக தொங்க விட்டுட்டு தனது குழந்தை (குழந்தை இப்போ வளர்ந்து விட்டது), கான்ஸ்டேபிள் மொட்டை ராஜேந்திரன், டீச்சர் எமி ஜக்சன் சேர்ந்து மொத்தம் 4 பேரும் இந்தோ-சீன எல்லைக்கு போய் விடுகிறார்கள்.

அழகான காதலி கதாபத்திரத்தில் வரும் சமந்தா கல்யாணம் முடிந்த உடன் டாக்டருக்கு படித்தோம் என்பதையே மறந்து விடுவது. வழக்கமாக தமிழ் சினிமாவில் நடக்கிறது தான். இது நாயகிகளை போதைக்கு ஊறுகாய் போல பயன்படுத்தும் படங்களின் வரிசையில் மற்றுமொரு படம். ஜி.வி.பிரகாஷ் இசை படத்திற்கு பலம். ராதிகா. பிரபு என முன்னணி நட்சத்திர பட்டாளம் நடித்தாலும் நடிக்க இடம் கம்மி. கடைசியில் திரையரங்கை விட்டு வெளியே வரும் போது சமீபத்தில் வந்த படங்களை மொத்தமாக பார்த்த உணர்வு வந்தது.

[caption id="attachment_704" width="202" align="alignleft"]130 இளைய தளபதி[/caption]

திரைக்குள் ஒரு கதை என்றால் திரைக்கு வெளியே வேறு கதை. 130 அடி ‘கட்ட அவுட்’ போலீஸ் வேன் மேல் விழுந்தது, நல்ல வேளை உயிருக்கு சேதாரம் இல்லை. ஒரு டிக்கெட் 600 ரூபாய்க்கு விற்றது. இது போலீஸ்க்கு தெரியும். இருந்தும் புகார் செய்தால் தானே நடவடிக்கை எடுக்க முடியும். படம் பார்க்கும் அவசரத்தில் இருக்கும் ரசிகனுக்கு இதற்கெல்லாம் நேரம் எங்கு இருக்கும்.