மகாபலிபுரத்திலிருந்து சென்னைக்கு வரும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) முதலைப் பண்ணை அமைந்துள்ளது. பெரியவர்களுக்கு 40 ரூபாயும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும் தான் கட்டணம்.

<!--more-->

இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த முதலைகளைக் காணலாம். குறிப்பாக சதுப்பு நில முதலைகள் அதிகமாக உள்ளது. இதனைத் தவிர்த்து ஆமை, மீன், பாம்பு போன்ற உயிரினங்களையும் பார்க்க முடிகிறது.

[gallery ids="110,167,169,112,111" type="rectangular" orderby="rand"]

இதில் பாம்புகளுக்கென்று தனி இடம். கட்டணமும் தனிதான். ஒரு ஆளுக்கு 20 ரூபாய். பாதுகாப்புக் கருதி பாம்புகள் பானைகளில் அடைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆறு மாதத்திற்குப் பிறகும் பாம்புகளுக்கு விடம் எடுக்கப்படுகிறது. மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட மூன்று நாகப்பாம்புகளும் பீதியில் படம் எடுத்துக் கொண்டிருந்தன. பதிலுக்கு நானும் ஒரு படம் எடுத்தேன். அங்கு பணியில் இருப்பவர் பாம்புக்கு விடம் எடுப்பதை மக்கள் அனைவரும் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

http://www.badriseshadri.in/2013/03/blog-post_25.html?m=1

http://googleweblight.com/?lite_url=http://sankardotb.blogspot.com/2016/01/blog-post.html&amp;ei=VxEwxgxB&amp;lc=en-IN&amp;s=1&amp;m=178&amp;ts=1452349211&amp;sig=ALL1Aj6ZePfY76DAYFwoAGJbXgzPZFHyfQ