"பயணம் ஒரு மனிதனை புனிதனாக்குகிறது" எங்கேயோ படித்த ஞாபகம். ... ஆனால் நான் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கை கண்டிப்பாக என்னை புனிதனாக விடாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஏதோ நம்மால் முடிந்த வரைக்கும் பயணம் செய்வோமே. அப்படி துவங்கியது தான் இந்த மகாபலிபுரம் பயணம். இதுதான் ஆரம்பம்.
<!--more-->
மகாபலிபுரம் சென்னையில் இருந்து ஏறக்குறைய 60 km இருக்கும். பல்லவ மன்னர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள், குடைவரைக் கோவில்கள் இப்படி பார்பதற்கு நிறைய நிறைய இருக்கு!
[gallery ids="134,108,133,135,107" type="rectangular" orderby="rand"]
பல்லவர்களின் கைவண்ணத்தில் உருவான ரதம் போன்ற அமைப்பில் காணப்படும் இந்த ஐந்து கோவில்களும் ஐந்து ரதம் என்று அழைக்கப்படுகிறது. ஐந்து ரதம் இருப்பதால் பாண்டவர்களையும் சம்பந்தபடுத்தி பரவலாக பேசப்படுகிறது. ஆனால் பாண்டவர்களுக்கும் அங்கு இருக்கும் சிற்பங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்திய தொல்லியல் துறை பொறித்த கல்வெட்டு கூறுகிறது. இருப்பினும் நம் ஊரைச் சேர்ந்த tourist guide வெளிநாட்டவரிடம் ஒரு சிற்பத்தைக் காண்பித்து "This is Arjuna..." இப்படி பாண்டவர்களைப் பற்றிய வரலாறு போயிட்டுயிருக்கு. நரசிம்ம வர்மன் எப்போ வருவாரு?.... தெரியவில்லை
பார்க்க வேண்டிய இடங்களான கடற்கரை கோவில்கள், கலங்கரை விளக்கம் ஆகியவற்றை இன்னும் பார்க்கவில்லை. காரணம் அது வேற கதை. ...