முதுகில் பொதிமூட்டை சுமப்பது போல எனது சுமையைத் தூக்கிக்கொண்டு ஓடினேன்.

 ரயிலில் இடம் பிடிப்பதற்காக… 

ஒரு பெரியவர், பெரிய டிரங் பெட்டியை தூக்கிக் கொண்டு தள்ளாடி தள்ளாடி இறங்கினார். அவருக்கு உதவிய கேப்பில், என் அருகில் இருந்த வெள்ளைச் சட்டை காரன் என்னை முந்த(over take) பார்த்தான்.

“யோவ் இருய்யா, இங்க முன்னாடியே நிக்குறோம் ல”

என்று கத்தினேன்.

ஏப்படியோ முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றேன். பார்க்கும் இடமெல்லாம் மனிதர்கள்… கீழ, மேல, சீட்டுக்கு அடியில், கழிவறைக்கு அருகில் எங்கேயும்….. எங்கேயும் மனிதர்கள் . கடைசியில் ஒரு பெரியவருக்கு அருகில் என் கால்களை மட்டும் வைப்பதற்கு இடம் கிடைத்தது.

அந்த பெரியவரும் சிறிது நேரத்தில் நின்ற இடத்திலேயே வசதியாக உட்கார்ந்து கொண்டார். எனக்கு உட்கார தன்மானம் இடம் கொடுக்க வில்லை. ‘எல்லோரும் நடந்து வரும் வழியில் யாராவது உட்காருவார்களா?’

‘ஜட ஜடா(குறைந்த டெசிபலில்) கட கடா(அதிக டெசிபலில்) மட மடா (குறைந்த டெசிபலில்)’, என்ற இரயிலின் பின்னணி இசையில் ஒரு வட இந்தியர் வாயில் இந்தி சீறி பாய்ந்தது.

“லடுக்கி ….. நிக்கல் கரோ….”

மேல லக்கேஜ்ஜோட லக்கேஜ்ஜா ஒரு பெண் படுத்திருந்தார். அவர் இதை பொருட்படுத்தவே இல்லை. எழுந்தாள் இடம் போயிடுமே. அந்த பெண் உஷார் தான்.

இதெல்லாம் பார்த்த என்னால் நிற்க முடிய வில்லை. அப்படியே உட்கார்ந்து விட்டேன். நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது.

சிறிது நேரத்தில் ஒரு குரல் கேட்டது.

“வெள்ளரி பிஞ்சு.., வெள்ளரி பிஞ்சு., சூட்டுக்கு நல்லது; எளிதில் ஜீரணமாகுற பொருளுங்க.. இந்த பாட்டிக்கு உதவி பண்ணுங்க தம்பிகளா….. விதையே இருக்காதுங்க. வெள்ளரி பிஞ்சு… வெள்ளரி பிஞ்சு..” கொஞ்ச நேரத்தில் முக்கால் வாசி பேரின் கைகளில் வெள்ளரி பிஞ்சு. என்னையும் சேர்த்து தான். தொடர்ந்து கடலை மிட்டாய், முறுக்கு, சமோசா வியாபாரிகள் அணி வகுப்பு நடத்தினர். யாரக்கும் அந்த பாட்டியிடம் இருந்த வியாபார தந்திரம் இல்லை.

இரயில் பயணம் பலருக்கு பலவிதமான அனுபவம் தரும். அதில் வித்தியாசமான மனிதரிகளை சந்திக்க நேரிடும். அப்படிப்பட்டவர் தான் இவரும். அப்படியே போகிற போக்கில் காமேடி பண்ணிட்டு போற ஆளு இவரு. தன்னையே பகடி பண்ணி அனைவரின் முகத்திலும் சிரிப்பை வரவழைத்தவர். அந்த வகையில் ‘அசத்த போவது யாரு?’, ‘கலக்க போவது யாரு?’ போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் திறமை இவருக்கு இருக்கிறது.

முன் பதிவில்லா பயணச் சீட்டு வாங்கிட்டு போனால் எப்படியும் ஒரு சில டாஸ்மாக் பிரியர்களை சந்திக்க நேரிடும். குடித்தால் சிலர் போதையில் சண்டைக்கு வருவார்கள் அல்லது புலம்புவார்கள் ஆனால் இங்கே இவர் ஒரு படி மேலே போய் பாடினார். அந்த கூத்த நீங்களே பாருங்க..

இப்படிப்பட்ட சம்பவங்கள் இப்படிப்பட்ட பயணத்தில் மட்டும் தான் கிடைக்கும். ஆனாலும் ஒரு வருத்தம், காலாபாணி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போல ஒரு பெட்டியில் இத்தனை போரா என்று. கூடுதலாக ஒரு பெட்டி ஒதுக்கி இருக்கலாம். அல்லது அந்த வழித்தடத்தில் கூடுதலாக ஒரு இரயில் விட்டு இருக்கலாம். கூடுதலாக ஒரு சதவீதம் யோசித்திருக்கலாம் ஏழைகளுக்காக இந்த அரசியல்வாதிகள்.