பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், சில பள்ளிகள் குற்றங்களை மறைப்பதும், நிர்வாகங்கள் மெத்தனமாக செயல்படுவதும் மிகுந்த கவலையளிக்கிறது.

<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->

போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயமாக்கப்பட்டால், மாணவர்கள் மீது நடைபெறும் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்தலாம். மாணவிகள் தங்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சரியாக விசாரிக்க பள்ளிகளில் தனி குழு அமைக்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளின் மனநிலையை கவனித்து, அவர்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும். பள்ளிகள் மாணவிகளுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டியது அவசியம்.