ஒரு ஊருல அரசு பள்ளி ஒன்றுக்கு பிரபல நிறுவனத்தோட முதலாளி மதில் சுவர் கட்ட நினைத்தார்.
அதுக்காக அவர் தன் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியை கொடுக்க முன்வந்தார்.
அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளிக்கு மதில் சுவர் வருகிறதே என சம்மதித்தார்.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
இதை கேள்விப்பட்ட அந்த ஊர் அரசியல் முக்கியஸ்தர் கட்சிக்கு சேர வேண்டிய பணத்த கொடுத்தால் பணி துவங்க முடியும்னு ஒரு மிரட்டல விட்டு இருக்காரு...
சி.எஸ்.ஆர். நிதியிலும் கமிஷன் கேப்பிங்கலானு அந்த நல்ல மனுசன் ஊர விட்டே ஓடிட்டான்.
அந்த ஊருதான் ஆவடி... அங்கதான் நானும் இருக்கேன். நீங்களும் இருக்கீங்க.
ஆனா இந்த மேட்டர் தினமும் காலையில எழுந்து சுருங்கிய சட்டையோட அந்த பள்ளிக்கு போரானே காறி கடை பாயோட மகன். அவனுக்கு தெரியுமா?
இல்ல அந்த கறி கடை பாய்க்குதான் தெரியுமா?
அவருக்கு ஒரு கிலோ கறி வித்தா 50 முதல் 80 ரூபாய் வரை கமிஷன் கிடைக்கும். இந்த இடத்துல கமிஷன்னு சொன்னதுக்கு காரணம் இருக்கு. இப்பல்லாம் வருமானம் எல்லாமே கமிஷன்தானே...
ஆனா அரசியல் முக்கியஸ்தருக்கு அப்படியில்ல. ஒரு டெண்டர் பாஸ் ஆனா போதும்.
இதுக்கு அவர் செய்தது ஓட்டு கேட்டது. அதுக்கு நாம செய்தது ஓட்டு போட்டது.