வேரின் அருமை

எங்கே புரிய போகிறது

இலைகளுக்கு.


பச்சைப் பசேலென

மின்னுது நெற்பயிர்

கணினித் திரையில்..


குடங்கள் சுருங்கின

பாலித்தீன் பைகளாய்

குடிநீர்.