ஹீரா குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனம் மூலமாக முதலீட்டாளர்களை ஏமாற்றி சுமார் ரூ. 3,000 கோடிக்கும் மேல் மோசடி செய்த புகாரில், அதன் அதிபர் நவ்ஹீரா ஷேக் என்பவரை ஹரியானா மாநிலம் குருகிராமில் அமலாக்கத்துறை போலீசார் கைது செய்தனர். உடனடியாக ஹைதராபாத் கொண்டு வரப்பட்ட அவர், அங்குள்ள பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.