முதல் முறையாக இந்த ஊருக்கு 2015ம் ஆண்டில் வந்த போது ஆச்சரியப்பட்டு நின்றேன். அந்த ஊருக்கு நடுவே இருந்த விசாலமான காலி இடத்தைப்பார்த்து.
ஆனால் பின்னாளில் அந்த ஊர் புதிர்கள் நிறைந்ததாக இருக்கும் என்று அப்போது எனக்குத் தோன்றவில்லை.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
அந்த ஊர் ஆவடி அருகே உள்ள புதிய கன்னியம்மன் நகர். சென்னைக்கு அருகே இருக்கிற அழகிய ஊர்களில் இதுவும் ஒன்று.
அங்கிருப்பவர்களுக்கு, அந்த ஊர்தான் சொந்த ஊர் என்று சொல்ல முடியாது. அது அவர்களுக்கு, இரக்கமற்றவர்களால் ஒதுக்கப்பட்ட ஊர்.
இந்த ஊருக்கும் சென்னைக்கும் இருக்கும் ஒரே தொடர்பு மாநகர பேருந்துதான்.
அந்த பேருந்துகளும் எப்போதாவது ஒருமுறை இந்த ஊரை ஏட்டிப்பார்த்து விட்டுச் செல்லும்...
எப்போதாவது ஒருமுறை, இந்த ஊருக்கு உதவிக்கரம் நீட்டி வரும் அரசியல்வாதிகள் இருப்பதையும் பிடுங்குபவர்களாக இருக்கிறார்கள்.
அதனால்தான் என்னவோ எப்போதும் அந்த ஊர் சூனியம் நிறைந்ததாகவே இருக்கிறது. இப்போதும், வசதிகளற்ற கிராமமாக அந்த ஊர் உள்ளது.
அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு சோகக் கதை பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும்.
அந்த ஊருக்கு செல்பவர்களுக்கும் அந்த சோகம் தொற்றிக்கொள்ளும். அங்கிருந்து வெளியேறியவுடன் சோகங்கள் கனவாகத் தோன்றும்.
அடிக்கடி செல்பவர்களும், அங்கேயே இருப்பவர்களும் அந்தக் கனவில் மூழ்கி விடுவார்கள்.
அந்த கனவில் தற்கொலையுண்டவர்கள் ஏராளம். அனேகர் விபத்தில் சிக்கி மாண்டு போயியுள்ளனர்.
அது ஒரு இரக்கமற்ற கனவு...