காலிக்குடங்களுடன் குடிநீருக்காக பொதுமக்கள் போராட்டம் நடத்திய இடம் முன்பொருகாலத்தில் ஏரியாக இருந்தது. இன்னும் சிலர் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தனர். அந்த சாலையும் ஏரியை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்தது.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
போராட்டத்தை கட்டுப்படுத்த ஏரிக்குள் கட்டப்பட்டிருந்த சமூதாய நலக்கூடத்தில் பொதுமக்களை அடைத்தனர், காவல்துறை உயர் அதிகாரிகள்.
வெளிநாட்டு நிறுவனம், அதிக பொருட்செலவில் ராட்சத குழாய்கள் அமைத்து ஏரியில், பல்லாயிரம் அடி ஆழத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, சுத்திகரித்து அரசு அலுவலகங்களுக்கும், உயர்தட்டு மக்களுக்கும் வினியோகித்தது.
நடுத்தர வர்க்க மக்கள் தங்களது உடமைகளை, அந்நிறுவனத்திற்கு விற்று, ஒரு மாதத்திற்கு தேவையான குடிநீரை பெறுவதற்கான வாட்டர் ஏ.டி.எம்., அட்டைகளை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
அடுத்தநாள் காலை முதலமைச்சர் ஏரியை ஆய்வு செய்ததாகவும், குண்டு துளைக்காத காரில் சென்று டீ குடித்ததாகவும் நாளிதழ்கள் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டன.
இன்னொரு பக்கத்தில், முதலமைச்சருக்கு கருப்பு கொடி காட்டியவர்கள் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட செய்திகளும் வெளியாகின.
குடிநீர் வாரிய அதிகாரிகள் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி, காற்றில் உள்ள ஈரப்பதத்தை குடிநீராக மாற்ற ஆகும் செலவு குறித்து விவாதித்தனர்.
ஆனால், அமைச்சர் காற்றின்
<!-- wp:nextpage --> <!--nextpage--> <!-- /wp:nextpage -->
ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் எடுத்து மக்களுக்கு வினியோகிக்க திட்டமிட்டு வருகிறோம், என, பேட்டியளித்தார்.
காட்சி ஊடகங்கள், அரசு விரைவில் காற்றில் இருந்து குடிநீர் தயாரித்து வினியோகிக்கப்போவதாக செய்தி வெளியிட்டன.
ஏரிகளைப்பற்றி எழுத தகவல் சேகரித்தப்பின், இப்படியான எண்ணங்கள் தூங்கவிடாமல் செய்து விட்டன.